தமிழ்நாடு

புதுச்சேரி காமராஜ் நகர் இடைத்தேர்தல் காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு

நான்குனேரி தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில், ரூபி மனோகரன் (60) போட்டியிடுகிறார்.

DIN

விக்கிரவாண்டி, நான்குனேரி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்குப் பதிவு அக்டோபர் 21-இல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதையடுத்து விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவும், நான்குனேரி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிடும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இந்நிலையில், புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக அகில இந்திய தலைவர் சோனியா காந்தி ஒப்புதலுடன் ஜான் குமார் சனிக்கிழமை அறிவிக்கப்பட்டார். 

இவர் முன்னாள் எம்.எல்.ஏ. மற்றும் தில்லி சிறப்பு பிரதிநிதியாக பதவி வகித்தவர். புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்காக, நெல்லித்தோப்பு தொகுதியை விட்டுக் கொடுத்தவர்.

நான்குனேரி  தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில், ரூபி மனோகரன் (60) போட்டியிடுகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மமதா மீது சிபிஐ வழக்குப் பதிய வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு!

குளிர் அலை: அதிகாலையில் நடைப்பயிற்சி வேண்டாமே! செய்யக்கூடாதவை..

புதுச்சேரியிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 3,000 பொங்கல் பரிசு! ஆனால்...

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ.90.16ஆக நிறைவு!

விஜய்யிடம் சிபிஐ விசாரணை நிறைவு!

SCROLL FOR NEXT