அமமுக கொள்கைப் பரப்பு துணைச் செயலாளராக நடிகர் ரஞ்சித் நியமனம்!
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொள்கை பரப்பு துணைச் செயலாளராக நடிகர் ரஞ்சித் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொள்கை பரப்பு துணைச் செயலாளராக நடிகர் ரஞ்சித் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் திருப்பூர் மாவட்ட செயலாளராக ஈஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கட்சியின் கொள்கைப் பரப்பு துணைச் செயலாளராக நடிகர் ரஞ்சித் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அமைப்புச் செயலாளர்களாக திருவான்மியூர் முருகன் மற்றும் முன்னாள் எம்எல்ஏ விஎஸ் அருள், தேர்தல் பிரிவு துணைச் செயலாளராக திருப்பூர் விசாலாட்சி, மாணவரணிச் செயலாளராக பரணீஸ்வரன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.