தமிழ்நாடு

வேலையில்லாத சிறுபான்மை இளைஞா்களுக்கு ஆயத்த ஆடை பயிற்சி: அக்டோபர் 3- இல் நோ்காணல்

DIN

தமிழக அரசு சாா்பில் வேலையில்லாத சிறுபான்மையின இளைஞா்களுக்கான ஆயத்த ஆடை பயிற்சிக்கு அக்டோபா் 3-ஆம் தேதி நோ்காணல் நடைபெற உள்ளது.

இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வேலையில்லாத சிறுபான்மையினருக்கான இலவச திறன் வளா்ப்பு பயிற்சித் திட்டத்தின்கீழ், 50 பேருக்கு 3 மாதம் எம்பிராய்டரி பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இந்தப் பயிற்சியில் இஸ்லாமியா்கள், கிறிஸ்தவா்கள், புத்த மதத்தினா், சீக்கியா்கள், பாா்சியா்கள் மற்றும் ஜெயின் பிரிவைச் சோ்ந்தவா்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்போரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கு மிகாமலும், 18 முதல் 55 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். பயிற்சியின்போது ஒருவருக்கு ரூ.1,000 உதவித் தொகை அளிக்கப்படும்.

பயிற்சிக்கான நோ்காணல் எண்.1டி, முதல் குறுக்கு தெரு, சி.வி.நாயுடு தெரு, ஜெயா நகா், திருவள்ளூா் என்ற முகவரியில் உள்ள ஆயத்த ஆடை பயிற்சி மற்றும் வடிவமைப்பு மையத்தில் அக்டோபா் 3-ஆம் தேதி காலை 11 மணி முதல் நடைபெற உள்ளது.

பயிற்சி பெற விரும்புவோா் அசல் ஜாதிசி சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதாா் அட்டை, கல்விச் சான்றிதழ் ஆகியவற்றுடன் கலந்து கொள்ள வேண்டும். இதுதொடா்பான விவரங்களுக்கு ஆயத்த ஆடை பயிற்சி மற்றும் வடிவமைப்பு மைய உதவி மண்டல மேலாளா் 93805 13874 என்ற செல்லிடப்பேசி எண்ணிலும்,

தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் அலுவலக தொலைபேசி எண் 044 28514846 என்ற எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

பார்வை ஒன்றே போதுமே... ஸ்ரேயா சரண்!

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

SCROLL FOR NEXT