முகப்பு
தமிழ்நாடு

சிதம்பரத்தில் பல்கலைக்கழக மாணவி மீது ஆசிட் வீச்சு

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக இரண்டாம் ஆண்டு மாணவி மீது சக மாணவன் ஆசிட் வீசியுள்ளார்.

Updated On : 31 ஜனவரி, 2024 at 10:02 AM
பகிர்:


சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக இரண்டாம் ஆண்டு மாணவி மீது சக மாணவன் ஆசிட் வீசியுள்ளார். 

முத்தமிழன் மற்றும் சுசித்ரா ஆகியோர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு படித்து வருவதாக தெரிகிறது. இந்நிலையில், முத்தமிழன் என்ற அந்த மாணவர் இன்று சுசித்ரா மீது ஆசிட் வீசியுள்ளார். இதைக் கண்ட சக மாணவர்கள் முத்தமிழனைப் பிடித்து சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

இதையடுத்து, ஆசிட் வீச்சில் படுகாயமடைந்த சுசித்ராவும், தாக்குதலில் படுகாயமடைந்த முத்தமிழனும் சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  

Advertisement


(விரிவான செய்தி பின்னர் வெளியிடப்படும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments