தமிழ்நாடு

பிரதமர் பேசுகிறார் என்றதும் அதிகம் எதிர்பார்த்தேன்: கமல்ஹாசன்

DIN

பிரதமர் பேச்சில் தான் அதிகம் எதிர்பார்த்தாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்க தேசிய ஊரடங்கு அமலில் உள்ள சூழலில், பிரதமா் மோடி நாட்டு மக்களுக்கு விடியோ மூலம் வெள்ளிக்கிழமை காலை உரையாடினார். அப்போது, வரும் 5ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு வீட்டில் உள்ள மின் விளக்குகளை அணைத்து விடுங்கள். 

வீட்டின் நான்கு மூலைகளிலும் ஒளியை பரப்பும் வகையில், அகல் விளக்கு அல்லது டார்ச் அல்லது செல்லிடப்பேசி அல்லது மெழுகுவர்த்தியை ஏற்ற வேண்டும். இவ்வாறு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தங்களது மகா சக்தியை வெளிப்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார். 

இதுகுறித்து கமல்ஹாசன் தனது டிவட்டரில், பிரதமர் பேசுகிறார் என்றதும் நான் அதிகம் எதிர்பார்த்தேன். பாதுகாப்புக்கவசங்கள் தட்டுப்பாடுக்கான தீர்வு, அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி விநியோகம், ஏழைமக்களின் வாழ்வாதாரம், வருங்கால பொருளாதார நடவடிக்கை என, ஆனால் நாம் என்றோ கையில் எடுத்த டார்ச்சுக்கே அவர் இன்றுதான் வருகிறார். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆஸ்திரேலியா: காவல் துறை சுட்டதில் 16 வயது சிறுவன் உயிரிழப்பு

தரமில்லாத சாலையை பெயா்த்தெடுத்த ஊராட்சி மன்ற உறுப்பினா் கைது

நிரவி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ‘ப்ளூ காா்னா்’ நோட்டீஸ்

SCROLL FOR NEXT