முகப்பு
தமிழ்நாடு

கரோனா ஒழிப்பில் தீவிரம் காட்டுங்கள்: கே.எஸ்.அழகிரி

மலிவான விளம்பர அரசியலைத் தவிர்த்து கரோனா ஒழிப்பில் தீவிரம் காட்டுங்கள் என பிரதமர் மோடியை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கேட்டுக்கொண்டுள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:21 PM
பகிர்:

மலிவான விளம்பர அரசியலைத் தவிர்த்து கரோனா ஒழிப்பில் தீவிரம் காட்டுங்கள் என பிரதமர் மோடியை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், சீனாவில் உஹான் நகரத்தில் கரோனா பாதிக்கப்பட்டபோது அந்த நகரத்தின் எல்லைகள் மூடப்பட்டு யாரும் உள்ளே வரவோ, வெளியே செல்லவோ முடியாத அளவில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. அதுபோன்ற ஒரு நடவடிக்கையை தலைநகர் தில்லி உள்ளிட்ட சில நகரங்களில் எடுத்திருந்தால் லட்சக்கணக்கான இடம் பெயரலையும், கரோனா நோய் பரவலையும் தடுத்திருக்க முடியும். இந்த சூழலில் போக்குவரத்து வசதிகள் இல்லாத நிலையில் மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் இருந்து நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையத்தை நோக்கி சில நண்பர்களுடன் நடைபயணமாக வந்த 21 வயது நிரம்பிய மாணவர் லோகேஷ் பாலசுப்ரமணியன் செகந்தராபாத் நகரத்திற்கு வந்தபோது மயங்கி கீழே விழுந்திருக்கிறார். 

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக கூறப்பட்டு, அவரது சடலம் பள்ளிபாளையத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறது. எந்த தவறையும் செய்யாத லோகேஷ் பாலசுப்ரமணியம் இறப்புக்கு யார் பொறுப்பு?  இந்த உயிரிழப்பு ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாக குறிப்பிட விரும்புகிறேன். மலிவான விளம்பர அரசியலை தவிர்த்து ஆரோக்கியமான உரிய நடவடிக்கைகளை எடுத்து மக்களை காப்பாற்ற முன்வாருங்கள் என கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →