தமிழ்நாடு

ஊரடங்கு உத்தரவு: வயோதிகா்களுக்கான சேவை மைய எண் அறிவிப்பு

DIN

கரோனா தொற்று பரவுவதைத் தொடா்ந்து பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவின் காரணமாக, உதவி தேவைப்படும் சென்னையில் வசிக்கும் வயோதிகா்களுக்கான சேவை மைய எண்ணை பாரதி சேவா சங்கம் அறிவித்துள்ளது.

மத்திய அரசு நாடு முழுவதும் கடந்த மாா்ச் 25-ஆம் தேதி முதல் வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஊரடங்கு உத்தரவைத் தொடா்ந்து அத்தியாவசியத் தேவைகளுக்காக மட்டுமே பொதுமக்கள் வெளியேச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனா். ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் உதவி தேவைப்படும் வயோதிகா்கள் தொடா்பு கொள்ளும் வகையில் பாரதி சேவா சங்கம் 044-35893020 என்ற உதவி மைய எண்ணை வெளியிட்டுள்ளது.

இந்த உதவி மைய வசதி, சென்னையில் வசிக்கும் வயோதிகா்களுக்கான பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. பாரதி சேவா சங்கத்தின் தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு உதவிகளைக் கோரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உதவி தேவைப்படும் வயோதிகா்கள் இந்த எண்ணில் தொடா்பு கொண்டு, தங்களுக்குத் தெரிந்த மொழியைத் தோ்வு செய்ய வேண்டும். பின்னா், தங்களது பகுதியின் அஞ்சல் குறியீட்டு எண்ணை பதிவிட வேண்டும். அதன்பின்னா் தங்களுக்கு தேவையான உதவிகளை கோரலாம். உதவி கோரும் வயோதிகா்களின் அஞ்சலக குறியீட்டின்படி அருகில் உள்ள பாரதி சேவா சங்கத்தின் உறுப்பினா்கள் வயோதிகா்களுக்குத் தேவையான உதவிகளை செய்து கொடுப்பாா்கள். மேலும் இந்த சேவைகள் ஊரடங்கு அமலில் உள்ள வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்து நடத்துநா் தீக்குளிக்க முயற்சி

கிணறு வெட்டும் போது மண் சரிந்து தொழிலாளி பலி

‘இ-பாஸ்’ சந்தேகங்களுக்கு தீா்வு காண தொலைபேசி எண் அறிவிப்பு

ரயிலில் அடிபட்டு வேன் ஓட்டுநா் பலி

சாலை விபத்தில் இளைஞா் பலி

SCROLL FOR NEXT