தமிழ்நாடு

ராமநாதபுரத்தில் தங்கியிருந்த இந்தோனேசியாவைச் சேர்ந்த 8 பேர் உள்பட 11 பேர் மீது வழக்கு

DIN

ஊரடங்கு உத்தரவையடுத்து இராமநாதபுரம் பாரதி நகரில் உள்ள ஒரு மசூதியில் வெளி நாட்டினர் தங்கி உள்ளதாக தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் பட்டணம் காத்தான் கிராம நிர்வாக அலுவலர் செல்வம் நேற்று அங்கு சென்று சோதனை நடத்தினார். 

அங்கு இந்தோனேசியா நாட்டின் பல்வேறு மாகாணங்களைச் சேர்ந்த ஜெய்லானி 40, இவரது மனைவி சித்தி ரொகானா 45, ரமலான் பின் இப்ராஹிம் 47, இவரது மனைவி அமான் ஜகாரியா 50, முகமது நசீர் இப்ராஹிம் 50, இவரது மனைவி கமரியா 55, மரியோனா 45, இவரது மனைவி சுபிஸ்னி 43 ஆகியோர் மதப்பிரசாரத்திற்காக சுற்றுலா விசாவில் மார்ச் 24 ஆம் தேதி இராமநாதபுரம் வந்து இங்கு தங்கியிருந்தது தெரிந்தது. 

ஊரடங்கு  உத்தரவை மீறி இவர்கள் தங்குவதற்கு ராமநாதபுரத்தைச் சேர்ந்த முகமது அலி, அஷரப் அலி, அறக்கட்டளை நிர்வாகி முகமது காசிம் ஆகியோர் இடம் கொடுத்தது தெரிந்தது. கிராம நிர்வாக அலுவலர் செல்வம் புகாரின் அடிப்படையில் இவர்கள் 11 பேர் மீது கேணிக்கரை காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு விசாரணை மே 15-க்கு ஒத்திவைப்பு

மாநில சிலம்பம் போட்டியில் சங்ககிரியைச் சோ்ந்த மாணவா்கள் வெற்றி

ஈரான் மீன்பிடிப் படகு கேரளத்தில் தடுத்து நிறுத்தம்: 6 தமிழா்களை கடலோர காவல் படை கைது செய்து விசாரணை

ஏற்ற இறக்கத்தில் பங்குச்சந்தை: சிறிதளவே உயா்ந்தது சென்செக்ஸ்!

கல்வித் துறையில் தொடா் முன்னேற்றம், இந்தியாவை விக்சித் பாரத்க்கு நெருக்கமாகக் கொண்டு செல்கிறது: குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் பெருமிதம்

SCROLL FOR NEXT