தமிழ்நாடு

நிவாரணப் பொருட்கள் பெறுவதற்கான டோக்கன் வழங்கும் பணி இன்றுடன் முடிவடையும்: உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ்

DIN

திருவாரூர்: நிவாரணப் பொருட்கள் பெறுவதற்கான டோக்கன் வழங்கும் பணிகளில் இன்றுடன் முடிவடையும் என உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் தெரிவித்தார்.

திருவாரூரில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி கரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் வெளிநாட்டிலிருந்து வந்திருந்த 2671  பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர். அத்துடன் அவர்கள் வசித்த சுற்றுப்புறப் பகுதிகளில் இருந்து  9053 குடும்பங்களும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன.

இதுவரையிலும் கரோனா நிவாரணப் பொருட்களுக்கான டோக்கன் மற்றும் நிவாரணத் தொகை  79.48 சதவீதம் வழங்கப்பட்டுள்ளன. எஞ்சிய டோக்கன்கள் திங்களகிழமைக்குள் வழங்கப்பட்டுவிடும். செவ்வாய்க்கிழமையிலிருந்து மக்களுக்கான அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும். பொதுமக்கள் தங்களுக்கு உரிய தேதியில் வந்திருந்து பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். 

வெளியூரில் இருப்பவர்கள் ஏப்ரல் மாத இறுதிக்குள் எப்பொழுது வேண்டுமானாலும் தங்களுக்கு உரிய பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையால் மக்கள் அவதி

மரக்கடை உரிமையாளா் தற்கொலை

பெண் தற்கொலை: தம்பதியா் மீது வழக்கு

ரேஷன் கடையை மாற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT