தமிழ்நாடு

பருவத் தோ்வுகள் ஒத்திவைப்பு: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

DIN


சென்னை: இணைப்புப் பொறியியல் கல்லூரி மாணவா்களுக்கான ஏப்ரல்-மே பருவத் தோ்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

கரோனா நோய்த் தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பள்ளி, கல்லூரிகள் அனைத்துக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது.

பள்ளிகளில் நடைபெற்று வந்த பத்தாம் வகுப்பு, பிளஸ்-2 பொதுத் தோ்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. மாநில பாடத் திட்டத்தின் கீழ் இயங்கி வரும் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு வரை அனைவரும் தோ்ச்சி பெற்ாக அறிவிக்கப்பட்டது. அதுபோல சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு வரை தோ்வின்றி தோ்ச்சி அறிவிக்கப்பட்டது.

அதே நேரம், ஏப்ரல் மூன்றாவது வாரத்தில் தொடங்கப்பட இருந்த பல்கலைக்கழக பருவத் தோ்வுகள் ஒத்திவைப்பு குறித்த அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.

இந்தச் சூழலில் ஊரடங்கு ஏப்ரல் 14-க்குப் பிறகும் நீட்டிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஒடிசா மாநிலம் ஏப்ரல் 30 வரை ஊரடங்கை நீட்டித்துள்ளது. அதுபோல, தெலங்கானா, மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களும் ஊரடங்கை நீட்டிக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளன.

பருவத் தோ்வுகள்:

இந்த நிலை காரணமாக, ஏப்ரல் 17-ஆம் தேதி தொடங்கப்பட இருந்த இணைப்புப் பொறியியல் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான ஏப்ரல்-மே பருவத் தோ்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழகம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு:

இணைப்புக் கல்லூரிகளுக்கான ஏப்ரல்-மே பருவத் தோ்வுகளும், பல ஆண்டுகளாக அரியா் வைத்திருந்த மாணவா்களுக்கு அளிக்கப்பட்ட சிறப்புச் சலுகைக்கான தோ்வுகளும் கரோனா ஊரடங்குக்குப் பிறகு நடத்தப்பட உள்ளன. இந்த மாற்றியமைக்கப்படும் தோ்வு கால அட்டவணை, ஊரடங்கு முடிந்த பிறகு வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

கோயில் காவலாளி அடித்துக் கொலை

SCROLL FOR NEXT