தமிழ்நாடு

ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? -முதல்வர் தலைமையில் நாளை அமைச்சரவைக் கூட்டம்

DIN

தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை மாலை 5 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடைபெற இருக்கிறது.

கரோனா பரவல் எதிரொலியாக கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. வருகிற ஏப்ரல் 14 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து நாளை அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நோயின் தாக்கத்தைப் பொறுத்து ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முடிவு செய்யப்படும் என்று கூறினார். தொடர்ந்து, இன்று காலை 19 மருத்துவ நிபுணர்களுடன் கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அவர் ஆலோசனை மேற்கொண்டார்.

மேலும், நாளை காலை அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொள்ளவிருப்பதும் குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆவது முறை கோப்பை வென்றாா் ஸ்வியாடெக்

மாவோயிஸ்டுபோல் பேசுகிறாா் ராகுல்: பிரதமா் மோடி கடும் குற்றச்சாட்டு

முஸ்லிம்களுக்கு எதிராக பாஜக வெறுப்பு பிரசாரம் - தோ்தல் ஆணையத்தில் சீதாராம் யெச்சூரி புகாா்

வனப் பகுதியில் தரையிறங்கிய ஹெலிகாப்டா்: ஈரான் அதிபரின் நிலை என்ன?

தனியாா் பள்ளிகளில் இலவசக் கல்வி: மாணவா் சோ்க்கை விண்ணப்பப் பதிவு இன்று நிறைவு

SCROLL FOR NEXT