தமிழ்நாடு

தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் எப்படி இருக்க வேண்டும்? தமிழக அரசு அறிவுரை

DIN

கரோனா அறிகுறி அல்லது கரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த பலரும் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களும், குடும்பத்தினரும் கடைபிடிக்க வேண்டிய சில முக்கிய வழிமுறைகள் குறித்து தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளாவன..

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நாடு அல்லது வேறு மாநிலத்திலிருந்து திரும்பிய ஒரு நபர் அல்லது கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவருடன் இருந்தவர்கள், பிறருக்கு நோய்க்கிருமி பரவுவதைத் தடுக்க சமுதாயத்திலிருந்து தன்னை விலக்கி வீட்டில் தனிஅறையில் தனிமைப்படுத்திக் கொண்டு சில வழிமுறைகளை கடைப்பிடிப்பதையே வீட்டில் தனிமைப்படுத்தி இருத்தல் என அழைக்கிறோம்.

அதன்படி தனிமைப்படுத்தப்பட்டவர்கள் கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

  • தனிமைப்படுத்தப்பட்டவர் பயன்படுத்திய பொருட்களை மற்றவர்கள் பயன்படுத்தக்கூடாது.
  • தனிமைப்படுத்தப்பட்டவரின் உடைகள், படுக்கை விரிப்பு போன்றவற்றை உதறாமல் முகக்கவசம் மற்றும் கையுறை அணிந்து தனியாக சோப்பு நீரில் ஊறவைத்து துவைத்து வெயிலில் காய வைக்க வேண்டும்.
  • முகக்கவசம் மற்றும் கையுறை ஆகியவற்றை கழற்றிய பின் கைகளை நன்கு சோப்புப் போட்டு கழுவ வேண்டும்.
  • அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த நபர்களையும் அடுத்த 28 நாட்களுக்கு தனிமைப்படுத்த வேண்டும்.
  • வீட்டை தினமும் மூன்று முறை கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்த வேண்டும்.
  • இவையனைத்தும் உங்கள் ஒவ்வொருவரின் நலம்பேணுவதற்கான அரசின் அறிவுறுத்தல் என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
     

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT