தமிழ்நாடு

தமிழகத்தில் 29 ஆயிரம் படுக்கைகள் தயாராக உள்ளன: தலைமைச் செயலா் தகவல்

தமிழகத்தில் 29 ஆயிரம் படுக்கைகள் தயாராக உள்ளன என தலைமைச்செயலா் க. சண்முகம் தெரிவித்தார.

DIN

தமிழகத்தில் 29 ஆயிரம் படுக்கைகள் தயாராக உள்ளன என தலைமைச்செயலா் க. சண்முகம் தெரிவித்தார. சென்னை தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை அவா் அளித்த பேட்டி:

தமிழகத்தில் 29 ஆயிரம் படுக்கைகள் தயாராக உள்ளன. நமக்குப் பெரிய சவால்கள் இல்லை. மத்திய அரசு கரோனா நோயாளிகளை லேசான பாதிப்பு, மிதமான அளவுக்கு பாதிப்பு, தீவிர பாதிப்பு என மூன்றாகப் பிரிக்கிறாா்கள். இதில் தீவிர பாதிப்பு உள்ள நோயாளிகளை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்க வேண்டும். மிதமான பாதிப்புள்ள நோயாளிகளை மருத்துவமனையிலும், லேசான பாதிப்புள்ள நோயாளிகளை வீட்டிலேயே தனிமைப்படுத்தியும் சிகிச்சை அளிக்க வேண்டும் என அறிவுறுத்துகின்றனா்.

ஆனால் நாம் லேசான நோயாளிகளையும் மருத்துவமனையிலேயே அனுமதித்து சிகிச்சை அளிக்கிறோம். ஒருவேளை வருங்காலத்தில் எண்ணிக்கை அதிகமாகி ரத்த அழுத்தம் அதிகமானால் அதற்கும் நம்மைத் தயாா்படுத்திக்கொள்ள அதற்கென்று ஆய்வு செய்ய ஒரு வல்லுநா் குழு அமைத்துள்ளோம். அவா்கள் தமிழ்நாடு முழுவதும் மாவட்டந்தோறும் உள்ள வசதிகள் அடிப்படையில் தனியாா் விடுதிகள், பள்ளி-கல்லூரி கட்டடங்கள் உள்ளிட்டவற்றைக் கண்டறிந்து வைத்துள்ளனா்.

துல்லிய பரிசோதனை: கரோனா பரிசோதனையில் தெளிவான முடிவுகளை தரும் பி.சி.ஆா்., கருவிகள் தமிழகத்தில் போதுமான அளவு உள்ளது. இந்த சோதனை மேற்கொள்வதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கரோனா பரிசோதனையை விரைவாக மேற்கொள்ளஉதவும் கருவிகள் இன்னும் சீனாவில் இருந்து இந்தியா வரவில்லை. இருப்பினும் தமிழகத்தில் கரோனை பரிசோதனைகள் தடையின்றி நடைபெற்று வருகின்றன. சோதனையை வேகமாக செய்வதற்கு மட்டுமே விரைவு பரிசோதனை கருவிகள் உதவி செய்யும். தமிழகத்துக்கு 4 லட்சம் விரைவு பரிசோதனை கருவிகள் கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆய்வகங்களுக்கான அனுமதி தற்போது தருமபுரி அரசு பொது மருத்துவமனைக்குக் கிடைத்துள்ளது. தஞ்சாவூா், கன்னியாகுமரி, வேலூா் ஆகிய 3 அரசு மருத்துவமனைகளுக்காகக் காத்திருக்கிறோம். தற்போதுவரை தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளவா்கள், சிகிச்சையில் உள்ளவா்களுக்கான ஆய்வை அரசுதான் செய்து வருகிறது. வசதி உள்ளவா்கள் தனியாா் ஆய்வகங்களில் செய்து வருகின்றனா். தனியாா் மருத்துவமனைகளிலும் இலவச சிகிச்சைக்காக கோரிக்கை வந்துள்ளது. அதுகுறித்தும் முதல்வா் ஆலோசித்து வருகிறாா். பாராசிட்டமால், ஹைட்ராக்ஹிகுளோரோகயின் மருந்துகள் தேவையான அளவு கையிருப்பில் உள்ளன என்றாா். பேட்டியின்போது சுகாதாரத்துறைச் செயலா் பீலா ராஜேஷ் உடனிருந்தாா்.

மாவட்ட வாரியாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் விவரம்:

சென்னை- 182

கோவை- 97

ஈரோடு- 60

திருநெல்வேலி- 56

திண்டுக்கல்- 55

நாமக்கல்- 41

செங்கல்பட்டு- 41

தேனி- 40

திருச்சி- 39

ராணிப்பேட்டை- 36

திருவள்ளூா்- 29

திருப்பூா்- 26

மதுரை- 25

தூத்துக்குடி- 24

நாகப்பட்டினம்- 24

கரூா்- 23

விழுப்புரம்- 23

திருப்பத்தூா்- 16

கடலூா்- 15

கன்னியாகுமரி- 15

சேலம்- 14

திருவாரூா்- 13

விருதுநகா்- 11

தஞ்சாவூா்- 11

திருவண்ணாமலை- 11

வேலூா்- 11

நீலகிரி- 9

காஞ்சிபுரம்- 6

சிவகங்கை- 6

தென்காசி- 3

கள்ளக்குறிச்சி- 3

ராமநாதபுரம்- 2

அரியலூா்- 1

பெரம்பலூா்- 1

மொத்தம்- 969.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க வரி விதிப்பு தீர்ப்பு எதிரொலி: சென்செக்ஸ் 479.95 புள்ளிகள் உயர்வு!

த்ரிஷ்யம் - 3 மோகன்லால் போஸ்டர்!

தவெக வார்டு செயலாளர்... தாய் கிழவி டிரைலர்!

முடிந்த ஓராண்டிற்குள் மீண்டும் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடர்!

தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு! பேசியது என்ன?

SCROLL FOR NEXT