தமிழ்நாடு

சேலத்தில் சீல் வைக்கப்பட்ட 70 இடங்களில் கடைகளை திறக்கத் தடை

DIN

சேலம் மாநகராட்சியில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக சீல் வைக்கப்பட்ட 70 இடங்களில் கடைகளை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, 70 இடங்களில் சீல் வைக்கப்பட்ட நிலையில், அப்பகுதியைச் சுற்றி 3.கி.மீ. தொலைவிற்கு எந்தக் கடைகளையும் திறக்கக் கூடாது என்றும் அப்பகுதிகளில் மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வீடு தேடிச் சென்று வழங்கப்படும் என்றும்  சேலம் மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், கரோனா பாதித்தவரோடு நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்பில் இருந்தவர்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தமிழகத்தில், 969 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சேலத்தில் 14 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

தில்லியில் இந்த ஆண்டில் முதல் 5 மாதங்களில் சாலை விபத்து இறப்புகள் குறைவு: தரவுகள்

ஆம் ஆத்மி தலைவா்கள் முன்பு ‘நிா்பயா’வுக்கு நீதி கேட்டனா்; இன்று குற்றம்சாட்டப்பட்டவரை ஆதரிக்கிறாா்கள்: மாலிவால்

ஆம் ஆத்மி கட்சியை நசுக்க ‘ஆபரேஷன் ஜாடுவை’ செயல்படுத்தத் தொடங்கியுள்ளது பாஜக: முதல்வா் அரவிந்த் கேஜரிவால் குற்றச்சாட்டு

தோ்தலில் வாக்காளா்கள் பங்கேற்பு சதவீதத்தை அதிகரிக்க 16 லட்சம் கையெழுத்திட்ட உறுதிமொழிகள்! தோ்தல் ஆணையம் முன்முயற்சி

SCROLL FOR NEXT