முகப்பு
தமிழ்நாடு

திருச்சி காவல்துறையினரின் மனிதநேயம்!

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் மஞ்சம்பட்டி தற்காலிக காய்கறி மார்க்கெட் அருகே நடந்து வந்த ஒட்டன்சத்திரம் சேர்ந்த ஒரு சிறுமி உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரை வழிமறித்து

Updated On : 12 ஏப்ரல், 2020 at 3:27 PM
பகிர்:

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் மஞ்சம்பட்டி தற்காலிக காய்கறி மார்க்கெட் அருகே நடந்து வந்த ஒட்டன்சத்திரம் சேர்ந்த ஒரு சிறுமி உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரை வழிமறித்து பாதுகாப்பு பணியில் இருந்த மணப்பாறை காவல்துறையினர் விசாரணை செய்தனர். 

வேளாங்கண்ணிக்கு செங்கல் சூளை தொழிலுக்கு சென்றனர் வேலை இல்லாததால் மீண்டும் சொந்த ஊரான ஒட்டன்சத்திரத்திற்கு வருவதற்கு 9 நாட்களாக நடந்துவருவதாகவும் இரண்டு நாட்களாக பசியில் இருப்பதாக கூறியதால் பின்னர் காவல்துறையினர் அனைவருக்கும் உணவு வழங்கி செலவுக்கு கையிலிருந்த தொகையையும் கொடுத்து அந்த வழியாக வந்த லாரியில் ஏற்றி சொந்த ஊரில் இறக்கிவிட்டு மணப்பாறை காவல்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறு லாரி ஓட்டுனரிடம் கூறி அவர்களை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.