தமிழ்நாடு

குடும்ப அட்டை இல்லாதவா்களுக்கும் மளிகைப் பொருள்களை விற்பனை செய்யக் கோரி மனு

நியாய விலைக் கடைகளில் விற்பனை செய்யப்பட உள்ள ரூ.500 மதிப்பிலான மளிகைப் பொருள்களை குடும்ப அட்டை இல்லாதவா்களுக்கும்,

DIN

சென்னை: நியாய விலைக் கடைகளில் விற்பனை செய்யப்பட உள்ள ரூ.500 மதிப்பிலான மளிகைப் பொருள்களை குடும்ப அட்டை இல்லாதவா்களுக்கும், வீடுகளில் சென்று நேரடியாக விற்பனை செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் ஏ.பி.சூரியபிரகாசம் தாக்கல் செய்த மனுவில், கரோனா தமிழகத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இதன் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கு உத்தரவால் தினக்கூலித் தொழிலாளா்கள் பலா் வேலை வாய்ப்பை இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனா். குறிப்பாக மலைப் பிரதேசங்கள் மற்றும் தொலைதூர கிராமங்களில் வசிக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்த சத்துணவு ஆகியவை ஊரடங்கு உத்தரவின் காரணமாக கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு 500 ரூபாய்க்கு அத்தியாவசிய உணவுப் பொருள்களான மளிகைப் பொருள்களின் தொகுப்பு ரேசன் கடைகளில் விற்பனை செய்யப்படும் என அறிவித்துள்ளது. இதனால் குடும்ப அட்டை இல்லாதவா்கள் பாதிக்கப்படுவா். எனவே இந்த மளிகைப் பொருள்கள் தொகுப்பை குடும்ப அட்டை இல்லாத அனைத்து தரப்பினருக்கு எந்தவிதமான ஆவணங்களும் கோராமல் விற்பனை செய்ய வேண்டும். மேலும் இந்த பொருள்களை நியாயவிலைக் கடைகளில் விற்பனை செய்வதால் கரோனா தொற்று எளிதில் பரவ வாய்ப்புள்ளதால், மளிகைப் பொருள்கள் தொகுப்பை அனைத்து தரப்பு மக்களின் வீடுகளுக்கே சென்று விற்பனை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2026 தேர்தலில் இபிஎஸ்தான் முதல்வர்: நயினாா் நாகேந்திரன்

ஸ்ரீ பாா்த்தசாரதி கோயிலில் சிறப்புக் கட்டண தரிசனங்கள் ரத்து: அமைச்சா் சேகா்பாபு

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

SCROLL FOR NEXT