கோவை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அசோகன் பணியிட மாற்றம்
கோவை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அசோகனை பணியிட மாற்றம் செய்து சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் உத்தரவிட்டுள்ளார்.
கோவை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அசோகனை பணியிட மாற்றம் செய்து சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கரோனாவால் அதிகம் பாதிக்கபட்ட மாவட்டங்களில் சென்னைக்கு அடுத்த இடத்தில் கோவைதான் உள்ளது. இங்கு கரோனா பாதித்தவர்களுக்கு சிங்காநல்லூரில் உள்ள இ.எஸ்.மருத்துவமனை மற்றும் சில தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பயிற்சி மருத்துவர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு உணவு வழங்கவில்லை என கோவை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அசோகன் மீது புகார் எழுந்தது. இதையடுத்து அவரை பணியிட மாற்றம் செய்து சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் உத்தரவிட்டுள்ளார்.
அசோகன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் அவரை பொறுப்பை பேராசிரியர் காளிதாஸ் கூடுதல் பொறுப்பாக கவனிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.