முகப்பு
கோப்புப்படம்
தமிழ்நாடு

வாராணசிக்கு சுற்றுலா சென்று வந்த 126 பேருக்கு திருவள்ளூரில் கரோனா பரிசோதனை

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வாராணசிக்கு ஆன்மிக சுற்றுலா சென்று திரும்பிய 126 பேருக்கு திருவள்ளூர் செயல்படாத தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள

தமிழ்நாடு

வாராணசிக்கு சுற்றுலா சென்று வந்த 126 பேருக்கு திருவள்ளூரில் கரோனா பரிசோதனை

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வாராணசிக்கு ஆன்மிக சுற்றுலா சென்று திரும்பிய 126 பேருக்கு திருவள்ளூர் செயல்படாத தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:27 PM
கோப்புப்படம்
பகிர்:

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வாராணசிக்கு ஆன்மிக சுற்றுலா சென்று திரும்பிய 126 பேருக்கு திருவள்ளூர் செயல்படாத தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் வைத்து கரோனா நோய்த் தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்வதற்காக சுகாதாரத்துறையால் அனுமதிக்கப்பட்டனர்.

தமிழகத்தின் அரியலூர், பெரம்பலூர், திருச்சி, நாகை மற்றும் மதுரை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 126 பேர் கடந்த மார்ச்13-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை வாரணாசிக்கு சுற்றுலா சென்றார்களாம். அதைத் தொடர்ந்து சுற்றி பார்த்துவிட்டு புறப்படும் போது ஊரடங்கு உத்தரவால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதையடுத்து அங்கிருந்து திரும்பி வரமுடியாமல் அங்கேயே தவித்தனர். இதையடுத்து வாராணசியில் உள்ள ஆட்சியர் மணிவண்ணன் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. பின்னர் அவரை அணுகி சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். 

அதைத் தொடர்ந்து 3 பேருந்துகள் ஏற்பாடு செய்து கொடுத்து தமிழகத்திற்கு அனுப்பி வைத்தார். இந்த நிலையில் அந்த பேருந்துகள் தமிழகம்-ஆந்திரம் எல்லைப்பகுதியில் வெள்ளிக்கிழமை காவல் துறையால் தடுத்து நிறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து அங்கிருந்து சுகாதாரத்துறையினர் பரிசோதனை செய்து பின்னர் வாகனங்களில் நள்ளிரவில் திருவள்ளூர்-திருத்தணி சாலையில் உள்ள பட்டரைபெரும்புதூரில் செயல்படாத தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தப்பட்ட சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். 

இதையடுத்து அங்கு 126 பேருக்கும் கரோனா நோய்த் தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இச்சோதனை முடிந்த பின்னரே சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கவும் ஏற்பாடு செய்யப்படும் எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →