தமிழ்நாடு

விருதுநகர் அருகே கல்லூரி மாணவி, பொறியாளருக்கு கரோனா தொற்று உறுதி

DIN

விருதுநகர் அருகே கன்னிசேரி புதூரை சேர்ந்த பொறியாளர் ஒருவர், குமார குலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் கரோனா தொற்று காரணமாக 17 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் ஒரு முதியவர் உட்பட பதினோரு பேர் குணமடைந்து வீட்டிற்கு திரும்பிவிட்டனர். தற்போது 6 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்த நிலையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான கிலி நாட்டில் மெக்கானிக்கல் இன்ஜினியராக பணிபுரிந்த 38 வயது 38 வயது நபரொருவர், தனது சொந்த ஊரான விருதுநகர் அருகே உள்ள கன்னிசேரி புதூருக்கு வந்துள்ளார்.

வீட்டில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த இவருக்கு ரத்த மாதிரி பரிசோதனை செய்யப்பட்டது அதில் அவருக்கு கரோனா தோற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. 

அதேபோல் குமாரபுரத்தில் சேர்ந்த 20 வயது ள்ள கல்லூரி மாணவி ஒருவருக்கும் கரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து இவர்கள் இருவரையும் மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் சனிக்கிழமை இரவு கொண்டு சென்றுள்ளனர்.

விருதுநகர் அருகே இரண்டு பேருக்கு கரோனா தோற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதால், அந்தக் கிராமங்களில் சுகாதாரத்துறையினர் முகாமிட்டு சுகாதார பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயலக தமிழர்கள் பதிவு செய்ய அழைப்பு

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

SCROLL FOR NEXT