முகப்பு
தமிழ்நாடு

மாநெல்லூரில் நெசவு, மண்பாண்டம், பீடி சுற்றும் தொழிலாளர்களுக்கு நிவாரணம்

கும்மிடிப்பூண்டி அடுத்த மாநெல்லூரில் ஊராட்சி தலைவர் லாரன்ஸ் ஏற்பாட்டில் நெசவு, மண்பாண்டம், பீடி சுற்றும் தொழிலாளர்களின் 550 குடும்பத்துக்கு அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட

தமிழ்நாடு

மாநெல்லூரில் நெசவு, மண்பாண்டம், பீடி சுற்றும் தொழிலாளர்களுக்கு நிவாரணம்

கும்மிடிப்பூண்டி அடுத்த மாநெல்லூரில் ஊராட்சி தலைவர் லாரன்ஸ் ஏற்பாட்டில் நெசவு, மண்பாண்டம், பீடி சுற்றும் தொழிலாளர்களின் 550 குடும்பத்துக்கு அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:31 PM
பகிர்:

கும்மிடிப்பூண்டி அடுத்த மாநெல்லூரில் ஊராட்சி தலைவர் லாரன்ஸ் ஏற்பாட்டில் நெசவு, மண்பாண்டம், பீடி சுற்றும் தொழிலாளர்களின் 550 குடும்பத்துக்கு அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டது.

கும்மிடிப்பூண்டி அடுத்த மாநெல்லூரில் 450 நெசவு தொழிலாளர், 50 மண்பாண்ட தொழிலாளர், 50 பீடி சுற்றும் தொழிலாளர்கள் குடும்பங்கள் உள்ளனர். ஊரடங்கின் காரணமாக இவர்கள் வேலை வாய்ப்பின்றி பெரிதும் சிரமப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் இவர்களுக்கு உதவும் வகையில் மாநெல்லூர் ஊராட்சி தலைவர் லாரன்ஸ் ஏற்பாட்டில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. நிகழ்விற்கு ஊராட்சி தலைவர் லாரன்ஸ் தலைமை தாங்கினார். துணை தலைவர் ஆயிஷாமா அனீபா, ஊராட்சி செயலாளர் பாபு, சமூக ஆர்வலர் ரஞ்சித் முன்னிலை வகித்தனர்.

நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவக்குமார், துணை தலைவர் மாலதி குணசேகரன், வட்டாட்சியர் ஏ.என்.குமார், கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி ரமமேஷ், மாவட்ட கவுன்சிலர் சாரதா முத்துசாமி பங்கேற்று 550 நெசவு, மண்பாண்ட, பீடி சுற்றும் தொழிலாளிகளின் குடும்பங்களுக்கு நிவாரண உதவியை வழங்கினர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →