முகப்பு
தமிழ்நாடு

சிதம்பரத்தில் இரவுக் காவலாளி வெட்டிக்கொலை

சிதம்பரத்தில் இரவுக் காவலாளி ஒருவர் மர்ம நபரக்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:32 PM
கோப்புப் படம்
பகிர்:

சிதம்பரத்தில் இரவுக் காவலாளி ஒருவர் மர்ம நபரக்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். 

இதுகுறித்து அண்ணாமலைநகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள அம்மாப்பேட்டை ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்தவர் நடராஜ் (55). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் இரவு காவலாளியாக பணியாற்றி வந்தார். ஞாயிற்றுக்கிழமை காலை வணிக வளாகத்திற்கு எதிரே உள்ள கான்சாகிப் வாய்க்காலின் கரை ஓரத்தில் வெட்டு காயங்களுடன் நடராஜ் சடலமாக கிடந்தார். 

அவரது முகம் மற்றும் கால்களில் வெட்டுக்காயம் இருந்தது. நள்ளிரவில் அவர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என தெரிய வந்துள்ளது. இதுபற்றி தகவலறிந்த அண்ணாமலைநகர் காவல் நிலைய ஆய்வாளர்  தேவேந்திரன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் நடராஜின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த கொலை சம்பவம் குறித்து அண்ணாமலைநகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நடராஜனை கொலை செய்தது யார்? அவருக்கு என்ன முன்விரோதம் இருந்தது என்பன போன்ற பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் விசாரணை: கொலை குறித்து கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஶ்ரீ அபிநவ், சிதம்பரம் டிஎஸ்பி (பொறுப்பு) சுந்தரம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று நேரில் விசாரணை நடத்தினர். மேலும் கடலூரிலிருந்து மோப்பநாய் அர்ச்சுன் வரவழைக்கப்பட்டு போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →