தமிழ்நாடு

தமிழகத்தில் மீன்பிடி தடைகால நிவாரணமாக மீனவர்களுக்கு தலா ரூ.5,000 வழங்கப்படும்: தமிழக அரசு

DIN

தமிழகத்தில் மீன்பிடி தடைக்கால நிவாரணமாக மீனவர்களுக்கு தலா ரூ.5,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக கடலோரப் பகுதிகளில் மீன்களின் இனப் பெருக்கக் காலமாகக் கருதப்படும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை விசைப்படகுகள் ஆழ்கடலில் சென்று மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது கரோனா பரவலைத தடுக்க தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் ஊரடங்கு தளா்த்தப்படும் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில் மே 3 வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையில் மீன்பிடித் தடைகாலம் தொடங்கி உள்ளதால், ராமேசுவரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏா்வாடி, தொண்டி, நம்புதாளை, சோழியகுடி உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 1,700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் அந்தந்த துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் மற்றும் சாா்பு தொழிலாளா்கள் என 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளனா். 

மீன்பிடித் தடை கால கட்டத்தில் தமிழக அரசு சாா்பில் நிவாரணமாக ரூ .5 ஆயிரம் வழங்கப்படுகிறது. இந்நிலையில், தடைகாலம் தொடங்குவதற்கு முன்பே கரோனா நோய் தொற்று பரவல் தடுப்பு ஊரடங்கு காரணமாக விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் மீனவா்கள் வருவாயின்றி மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனா். 

எனவே, தமிழக அரசு ஆண்டு தோறும் வழங்கப்படும் மீன்பிடி தடைகால நிவாரணத்தை உடனே வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ சங்கத்தினா் கோரிக்கை விடுத்திருந்தினர். இந்த நிலையில் தமிழகத்தில் மீன்பிடி தடைக்கால நிவாரணமாக மீனவர்களுக்கு தலா ரூ.5,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க ரூ.83.55 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வட கொரிய அதிபரின் ‘அந்தப்புரம்’? ஆண்டுக்கு 25 அழகிய பெண்கள்!

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

முன்கூட்டியே சென்னைக்கு பலமான கடற்காற்று: தமிழ்நாடு வெதர்மேன்

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

SCROLL FOR NEXT