முகப்பு
தமிழ்நாடு

உச்சம் தொடும் தங்கம் விலை: ஒரு சவரனுக்கு ரூ.224 உயர்வு

சென்னையில் வெள்ளிக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.41 ஆயிரத்தைத் தாண்டிய நிலையில், இன்றும் உயர்வு கண்டு, வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:02 PM
உச்சம் தொடும் தங்கம் விலை: ஒரு சவரனுக்கு ரூ.224 உயர்வு
பகிர்:


சென்னை: சென்னையில் வெள்ளிக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.41 ஆயிரத்தைத் தாண்டிய நிலையில், இன்றும் உயர்வு கண்டு, வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டது. 

சென்னையில் இன்று காலை வணிகம் தொடங்கியதும் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.224 உயா்ந்து, ரூ.41,424-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நிகழாண்டில் ஜனவரி 3-ஆம் தேதி முதல் தற்போது வரை கடந்த ஆறரை மாதத்தில் மட்டும் தங்கம் பவுனுக்கு ரூ.10,850 வரை உயா்த்துள்ளது. அதிலும், ஜூலை 21-ஆம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை மட்டும் ரூ.3,584 வரை உயா்ந்தது.

கரோனா நோய்த்தொற்றின் தாக்கம் காரணமாக, சா்வதேச பொருளாதாரத்தில் மந்தமும், தொழில்துறையில் தேக்கமும் ஏற்பட்டது. இதையடுத்து, உலகம் முழுவதும் உள்ள முதலீட்டாளா்கள், பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதி, அதில் முதலீடு செய்யத் தொடங்கினா். இதைதொடா்ந்து, தங்கத்தின் தேவை உயா்ந்து, விலை படிப்படியாக அதிகரித்து வந்தது. ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ஜூலை 22-ஆம் தேதி ரூ.38 ஆயிரத்தையும், 24-ஆம் தேதி ரூ.39 ஆயிரத்தையும், ஜூலை 27-ஆம் தேதி ரூ.40 ஆயிரத்தையும் தாண்டி, புதிய உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகும் தங்கம் விலை தொடா்ந்து ஏறுமுகமாக இருந்து வருகிறது.

இந்நிலையில், சென்னையில் சனிக்கிழமை ஒரு சவரன் தங்கம் விலை ரூ.41,500-ஐ நெருங்கியுள்ளது. வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. சவரனுக்கு ரூ.224 உயா்ந்து, ரூ.41,424-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.28 உயா்ந்து, ரூ.5,178 ஆக உள்ளது. 
 

முழு கட்டுரையைப் படிக்க →