முகப்பு
தமிழ்நாடு

பந்தல்குடி சாய் நகர் சீரடி சாய்பாபா கோவிலில் 1008 அகல்விளக்கு ஏற்றி சிறப்பு வழிபாடு

பந்தல்குடி சாய் நகர் சீரடி சாய்பாபா கோவிலில் அயோத்தி ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவை முன்னிட்டு 1008 அகல் விளக்குகளும் ஏற்றி சீரடி ஸ்ரீ சாய்பாபாவிற்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:04 PM
சிறப்பு வழிபாட்டில் பங்கேற்ற பக்தர்கள்
பகிர்:

பந்தல்குடி சாய் நகர் ஸ்ரீ சீரடி சாய்பாபா கோவிலில் அயோத்தி ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவை முன்னிட்டு 1008 அகல் விளக்குகளும் ஏற்றி சீரடி ஸ்ரீ சாய்பாபாவிற்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை  அருகே  பந்தல்குடியில் சீரடி சாய்பாபா கோவில் அமைந்துள்ளது. இங்கு  அயோத்தி ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா முன்னிட்டு உலக நன்மை வேண்டியும் கொரானா வைரஸ் தொற்று விடுபட வேண்டியும் ஸ்ரீ சீரடி சாய்பாபாவிற்கு 1008 அகல்விளக்கு ஏற்றி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இவ்வழிபாட்டில் திருவண்ணாமலை அரிவாள் சித்தர்  முன்னிலை வகித்து வழிபாட்டினை நடத்தி சிறப்பித்தார். இதில் பக்தர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் வழிபாடு செய்தனர்.

வழிபாட்டு ஏற்பாடுகளை பந்தல்குடி சாய் நகர் ஸ்ரீ சீரடி சாய்பாபா டிரஸ்டின் நிறுவனர் வி.சுந்தரமூர்த்தி மற்றும் குடும்பத்தாரும், பக்தர்களும் இணைந்து செய்திருந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →