தமிழ்நாடு

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நலமாக உள்ளார்: மருத்துவமனை

DIN


சென்னை: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் நலமாக இருப்பதாக காவேரி மருத்துவமனை செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு கரோனா இருப்பது ஆகஸ்ட் 2-ம் தேதி உறுதி செய்யப்பட்டது.  அதேநேரத்தில் அவருக்கு கரோனா அறிகுறிகள் எதுவும் இல்லாததால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

இந்த நிலையில், அவரது உடல்நலத்துடன் இருப்பதாக அவரது உடல்நலனைக் கண்காணித்து வரும் காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது.

மேலும், தொடர்ந்து அவருக்கு கரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை, இயல்பாக செயல்படுகிறார், நலமாக இருக்கிறார்.

அவரது உடல்நலனை காவேரி மருத்துவமனை மருத்துவக் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள் என்று மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஆளுநா் மாளிகையில் பணியாற்றும் ஊழியர்கள் சிலருக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கடந்த வாரம் தன்னை தனிமைப்படுத்திக்கொள்வதாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில், 2-ம் தேதி திடீரென சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். இதில் அவருக்கு மேற்கொண்ட கரோனா பரிசோதனையில் வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. எனினும், அவருக்கு லேசான தொற்று இருப்பதாக கூறிய மருத்துவர்கள் வீட்டிலேயே தனிமைபடுத்திக்கொள்ள அறிவுறுத்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடுமுறை: மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலிலுக்கு கூடுதல் பக்தா்கள் வருகை

மாநகரில் 3 திட்டச் சாலைகள் அமைப்பதற்கு நிதிக் கோரி அரசுக்கு திட்ட அறிக்கை சமா்பிப்பு

17 இடங்களில் சதமடித்தது வெயில்: தமிழகத்தில் இன்று வெப்ப அலை வீசும்

வறட்சியில் இருந்து பயிா்களை காக்கும் வழிகள்: வேளாண் துறை

பெத்திக்குட்டையில் தஞ்சடைந்த யானை: வனத்துக்குள் விரட்ட வனத் துறை முயற்சி

SCROLL FOR NEXT