கிருஷ்ணகிரியில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற சிறுவன் ஏரியில் மூழ்கி பலி
நண்பர்களுடன் ஏரியில் குளிக்கச் சென்ற 12 வயது சிறுவன் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதிமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நண்பர்களுடன் ஏரியில் குளிக்கச் சென்ற 12 வயது சிறுவன் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் அருகே உள்ள கெட்டு கிராமத்தை சேர்ந்தவர் காவேரி. இவருக்கு 12 வயது நிரம்பிய ரங்கநாதன் (12) என்ற மகன் உள்ளார். இவர் வியாழக்கிழமை அருகில் உள்ள ஏரியில் நண்பர்களுடன் குளிக்கச் சென்றார்.
ஆழமான பகுதிக்கு சென்ற நிலையில் நீச்சல் தெரியாத ரங்கநாதன் நீரில் மூழ்கியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் அருகில் இருந்தவர்களை அழைத்து அவரைக் காப்பாற்ற முயன்றனர். ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட ரங்கநாதன் இருசக்கர வாகனம் மூலம் சிகிச்சைக்காக காவேரிப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ரங்கநாதனைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து சடலத்தை கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக உடலை அனுப்பி வைத்தனர். நண்பர்களுடன் ஏரியில் குளிக்கச் சென்ற சிருவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.