முகப்பு
தமிழ்நாடு

நீலகிரியில் அதி கன மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அடுத்த 48 மணி நேரத்திற்கு நீலகிரியில் அதி கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:04 PM
பகிர்:

அடுத்த 48 மணி நேரத்திற்கு நீலகிரியில் அதி கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், தென்மேற்கு பருவ காற்று மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தீவிரம் அடைந்துள்ளதின் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு நீலகிரி மாவட்டத்தின் மலைசரிவு பகுதிகளில் ஒருசில இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய அதி கன மழையும், கோவை, தேனி மாவட்டங்களின் மலை பகுதிகளில் கன மழை முதல் மிக கன மழையும், திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடம். 
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகரி, குறைந்தபட்சம் 28 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.
கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தின் அவலாஞ்சி 58, கூடலூர் பஜார் 33, மேல் பவானி 32, மேல் கூடலூர் 31, நடுவட்டம் 23, தேவலா 22 உன மழைப் பதிவாகியுள்ளது. 
குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று 40-50 கிலோமீட்டர் வேத்தில் வீசக்கூடும். எனவே மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.