முகப்பு
தமிழ்நாடு

பள்ளிகளை தற்போது திறக்க வாய்ப்பில்லை: அமைச்சர் செங்கோட்டையன்

தற்போதைய சூழ்நிலையில் பள்ளிகள் திறப்பதற்கு வாய்ப்புகள் இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:04 PM
அமைச்சர் செங்கோட்டையன்
பகிர்:

தற்போதைய சூழ்நிலையில் பள்ளிகளைத் திறப்பதற்கு வாய்ப்பில்லை  என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

ஈரோடு கோபிச்செட்டிப்பாளையம் நகராட்சி சார்பில் பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தை அமைச்சர் செங்கோட்டையன் இன்று தொடங்கி வைத்தார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'தமிழகத்தில் தற்போதைய சூழ்நிலையில் பள்ளிகள் திறப்புக்கு வாய்ப்பில்லை. தமிழகத்தில் கரோனா பரவல் படிப்படியாக குறைந்தாலும் பெற்றோர்களிடம் கருத்து கேட்டு சூழ்நிலைக்கு ஏற்பவே முடிவு செய்யப்படும்' என்று தெரிவித்தார். 

மேலும், பள்ளிகளில் சுதந்திர தின விழா கொண்டாடப்படுவது குறித்து முதல்வர் அறிவிப்பார் என்றும் கூறினார். 

முன்னதாக, கரோனா பொதுமுடக்கம் காரணமாக தமிழகத்தில் கடந்த ஜூன் மாதம் திறக்கப்பட வேண்டிய பள்ளிகள் இன்னும் திறக்கப்படாமல் உள்ளன. மேலும், கரோனா பரவும் சூழ்நிலையால் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. மேலும், கரோனா பரவல் முழுவதுமாக குறைந்தபிறகு பெற்றோர்களின் கருத்துகளை கேட்டு பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும் என அமைச்சர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →