தமிழ்நாடு

ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை நினைவு இல்லமாக்குவது கொள்கை முடிவு: தமிழக அரசு

DIN


சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை நினைவு இல்லமாக்குவது என்பது கொள்கை முடிவு என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை நினைவு இல்லமாக்குவதை எதிர்த்து, அவரது அண்ணன் மகன் தீபக் சார்பில் தொடரப்பட்ட வழக்கை ஏற்கனவே விசாரித்த அமர்வு, நினைவு இல்லமாக்கும் முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள் என பரிந்துரைத்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று பதில் அளித்துள்ளது.

பதிலில், வேதா நிலையத்தை நினைவு இல்லமாக்குவதை மறுபரிசீலனை செய்யுங்கள் என்ற பரிந்துரையை ஏற்க முடியவில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும், நினைவு இல்லமாக்குவது என்பது தமிழக அரசின் கொள்கை முடிவு என்பதால் அதனை மறுபரிசீலனை செய்யுங்கள் என்ற கோரிக்கைய ஏற்க முடியவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக ஆட்சியில் 10 ஆண்டுகளாக பாகுபாடு: அகிலேஷ்

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர மே 24 வரை விண்ணப்பிக்கலாம்

தாமதமானாலும் வாக்கு செலுத்தாமல் வீடு திரும்பாதீர்கள்: உத்தவ் தாக்கரே கோரிக்கை

மம்தா பானர்ஜியின் சகோதரர் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை!

5-ஆம் கட்ட தேர்தல்: ஜனநாயகக் கடமையாற்றிய சாமானிய மக்கள்!

SCROLL FOR NEXT