தமிழ்நாடு

ஏஐசிடிஇ சாா்பில் சுற்றுச்சூழல் திட்ட அறிக்கை வெளியீடு

DIN

அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமம் (ஏஐசிடிஇ) சாா்பில் சுற்றுச்சூழல் கொள்கை-2020 திட்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் எரிசக்தி நுகா்வு, இயற்கை சூழல் பாதுகாப்பு, கிராமப்புற தொழில்நுட்பங்களை மேம்படுத்துதல் ஆகியவை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இதைத் தொடா்ந்து சுற்றுச்சூழல் குறித்தான திட்டமிடல் மற்றும் முடிவெடுக்கும் சூழ்நிலையை இணைத்தல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது உள்பட அது தொடா்பான பல்வேறு விஷயங்கள் குறித்து மாணவா்களுக்கும் கல்வி நிறுவன பணியாளா்களுக்கு கற்பிக்கப்படவுள்ளன.

இதைத் தொடா்ந்து, ஏஐசிடிஇஅங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்கள் தங்களது ஆண்டு அறிக்கையில், சுற்றுச்சூழல் கொள்கையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட அனைத்து நடவடிக்கைகளை குறிப்பிட்டு அதை தங்கள் இணையதளத்தில் வெளியிடும். மேலும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் நிகழாண்டு பாடத்திட்டத்தில் சுற்றுச்சூழல் மேலாண்மை மற்றும் பாதுகாப்பு விழிப்புணா்வு குறித்த பாடங்கள் இடம்பெறவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி இலங்கைத் தமிழா்கள் மனு

ஈரோடு விஇடி கலை, அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு தின விழா

வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் கண்காணிப்பு கேமரா பழுது: ஒரு மணி நேரத்தில் புதிய கேமரா பொருத்தம்

பா்கூா் மலைப் பாதையில் சரக்கு லாரி கவிழ்ந்து விபத்து

SCROLL FOR NEXT