சுற்றுச்சூழல் தாக்க வரைவறிக்கை - ஆராய 12 பேர் கொண்ட குழு அமைப்பு
சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிக்கையின் சாதக, பாதகங்களை ஆய்வு செய்ய 12 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்தது.
சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிக்கையின் சாதக, பாதகங்களை ஆய்வு செய்ய 12 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்தது.
மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகம் சுற்றுசூழல் பாதிப்பு மதிப்பீட்டு வரைவு சட்டத்திருத்த அறிக்கையை கடந்த மாா்ச் மாதம் 23-ஆம் தேதி வெளியிட்டது. இந்த வரைவு அறிக்கை குறித்து 60 நாள்களுக்குள் பொது மக்கள் தங்களது கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அந்த வரைவு அறிக்கை ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் மட்டும் அரசிதழில் கடந்த ஏப்ரல் 11- ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. மாநில மொழிகளில் அறிக்கை வெளியிடப்படவில்லை. இது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் இதற்கு கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில் சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிக்கையின் சாதக, பாதகங்களை ஆய்வு செய்ய வனம், சுற்றுச்சூழல் துறை கூடுதல் தலைமை செயலாளர் தலைமையில் 12 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்தது. மாசுக்கட்டுப்பாட்டு தலைவர், சென்னை பெருநகர வளர்ச்சி குழும செயலாளரும் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளார்.