முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் 6 நாள்களுக்குப் பிறகு உயர்ந்த தங்கம் விலை!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ. 280 உயர்ந்து ரூ. 40,888-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:07 PM
கோப்புப்படம்
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ. 280 உயர்ந்து ரூ. 40,888-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

கரோனா நோய்த்தொற்றின் தாக்கம், சா்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலர் மதிப்பு ஆகிய காரணிகளால் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. 

ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ஜூலை 22-ஆம் தேதி ரூ.38 ஆயிரமாக இருந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி ரூ. 43 ஆயிரத்தைக் கடந்தது. 

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 43,328 என உச்சத்தை அடைந்தது. அதன்பின்னர் தொடர்ந்து 6 நாள்கள் தங்கத்தின் விலை சற்று குறைந்தது.

இந்நிலையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.40,888-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ. 35 உயர்ந்து ரூ. 5,111-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

வெள்ளி கிராமுக்கு 0.30 பைசா உயர்ந்து, ரூ.76.70-க்கு விற்பனை ஆகிறது.

வெள்ளிக்கிழமை விலை நிலவரம் 

1 கிராம் தங்கம்............................... ரூ. 5,111

1 சவரன் தங்கம்............................... ரூ. 40,888

1 கிராம் வெள்ளி............................. ரூ. 76.70

1 கிலோ வெள்ளி............................ ரூ. 76,700

முழு கட்டுரையைப் படிக்க →