முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.232 குறைந்து ரூ.40 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகின்றது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:08 PM
Gold prices fall by Rs 232 per ounce in Chennai
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.232 குறைந்து ரூ.40 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகின்றது. 

கரோனா நோய்த்தொற்றின் தாக்கம், சா்வதேச பொருளாதார சூழல், அமெரிக்காவில் வேலைவாய்ப்பு குறியீடு சரிவு உள்பட பல்வேறு காரணிகளால் தங்கத்தின் மீது முதலீடு அதிகரித்தது. இதன் காரணமாக, தங்கத்தின் விலை படிப்படியாக உயா்ந்து வந்தது.

ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ஜூலை 22-ஆம் தேதி ரூ.38 ஆயிரமாக இருந்தது. இதன்பிறகு, நாள்தோறும் விலை அதிகரித்து, ஆகஸ்ட் 5-ஆம் தேதி ரூ.42 ஆயிரத்தையும், 7-ஆம் தேதி ரூ.43 ஆயிரத்தையும் தாண்டி, வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தைத் தொட்டது. இதன்பிறகு, தொடா்ந்து 5 நாள்களுக்கு தங்கத்தின் விலை குறைந்து வந்தது.

இந்நிலையில், தங்கத்தின் விலை திங்கள்கிழமை மீண்டும் குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூ.232 குறைந்து, ரூ.40,568-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.29 குறைந்து, ரூ.5,071 ஆக இருந்தது. 

அதே நேரத்தில், வெள்ளி விலை குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.1 குறைந்து, ரூ.74.10 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,000 குறைந்து, ரூ.74,100 ஆகவும் விற்கப்படுகிறது. 

திங்கள்கிழமை நிலவரப்படி 

1 கிராம் தங்கம்........................... 5,071

1 சவரன் தங்கம்............................... 40,568

1 கிராம் வெள்ளி............................. 74.10

1 கிலோ வெள்ளி.............................74,100

சனிக்கிழமை நிலவரப்படி

1 கிராம் தங்கம்............................... 5,100

1 பவுன் தங்கம்............................... 40,800

1 கிராம் வெள்ளி............................. 75.10

1 கிலோ வெள்ளி............................75,100

முழு கட்டுரையைப் படிக்க →