சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
சென்னையில் கரோனா பொது முடக்கம் காரணமாக மூடப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகள் நாளை திறக்கப்பட உள்ள நிலையில், வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை: சென்னையில் கரோனா பொது முடக்கம் காரணமாக மூடப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகள் நாளை திறக்கப்பட உள்ள நிலையில், வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
இதனை முன்னிட்டு சென்னையில் டாஸ்மாக் கடைகளின் வாயிலில் சாமியானா பந்தல்கள் போடப்பட்டு, பல கடைகளில் மைக் செட்டுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை, சென்னையில் நாளை திறக்கப்பட உள்ள டாஸ்மாக் கடைகளில் கரோனா தொற்றுப் பரவாமல் தடுக்க பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளில் தமிழக அரசு கூறியிருப்பதாவது,
ஒரு நாளைக்கு ஒரு டாஸ்மாக் கடையில் 500 டோக்கன்கள் மட்டுமே வழங்கப்பட வேண்டும்.
வாடிக்கையாளர்கள் கட்டாயம் 3 அடி இடைவெளி விட்டு வரிசையில் நிற்க வேண்டும்.
சானிடைசரால் கைகளை சுத்தப்படுத்திய பிறகே, வாடிக்கையாளர்கள் கவுண்டருக்கு அருகே அனுமதிக்கப்பட வேண்டும்.
டாஸ்மாக் கடைகளில் தேங்கும் குப்பைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.