வட தமிழக கடலோர மாவட்டங்களில் அடுத்த 2 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு
வட தமிழக கடலோர மாவட்டங்களில் அடுத்த 2 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வட தமிழக கடலோர மாவட்டங்களில் அடுத்த 2 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவில், தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்றின் காரணமாக அடுத்த 48 மணிநேரத்தில் வட தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், கோவை, நீலகிரி மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ்ஒட்டி பதிவாகும்.
கடந்த 24 மணிநேரத்தில் நீலகிரி மாவட்டம் தேவலா 5, பந்தலூர் 2, மேல் பவானி, அவலாஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் தலா ஒரு செ.மீ., மழைப்பதிவாகியுள்ளது.
வடக்கு வங்கக்கடல் மற்றும் அதனைஒட்டிய ஒடிசா, மேற்கு வங்க கடலோரப் பகுதியில் வரும் ஆகஸ்ட் 19ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.
வடக்கு வங்கக்கடல் மற்றும் அதனைஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.