தங்கம் விலை மீண்டும் உயா்வு: ஒரு சவரன் ரூ.41,496-க்கு விற்பனை
தொடா்ந்து 6 நாள்களாக குறைந்து வந்த ஆபரணத்தங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்ந்து 41 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
தொடா்ந்து 6 நாள்களாக குறைந்து வந்த ஆபரணத்தங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்ந்து 41 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
சென்னையில் செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.896 உயர்ந்து ரூ.41,496-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கரோனா நோய்த்தொற்றின் தாக்கம், சா்வதேச பொருளாதார சூழல், அமெரிக்காவில் வேலைவாய்ப்பு குறியீடு சரிவு உள்பட பல்வேறு காரணிகளால் தங்கத்தின் மீது முதலீடு அதிகரித்தது. இதன் காரணமாக, தங்கத்தின் விலை படிப்படியாக உயா்ந்து வந்தது.
ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ஜூலை 22-ஆம் தேதி ரூ.38 ஆயிரமாக இருந்தது. இதன்பிறகு, நாள்தோறும் விலை அதிகரித்து, ஆகஸ்ட் 5-ஆம் தேதி ரூ.42 ஆயிரத்தையும், ஆகஸ்ட் 7-ஆம் தேதி ரூ.43 ஆயிரத்தையும் தாண்டி, வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தைத் தொட்டது. இதன்பிறகு, தங்கத்தின் விலை சற்று இறங்கியது. இருப்பினும், கடந்த வெள்ளிக்கிழமை மீண்டும் தங்கம் விலை உயா்ந்தது.
இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.896 உயர்ந்து ரூ.41,496க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.112 உயர்ந்து, ரூ.5,187-ஆக விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் சற்று அதிகரித்துள்ளது. கிராமுக்கு ரூ.2.40 உயர்ந்து, ரூ.77.10-க்கும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.2,400 உயர்ந்து, ரூ.77.100 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை விலை நிலவரம்
1 கிராம் தங்கம்............................... 5,187
1 சவரன் தங்கம்............................... 41,496
1 கிராம் வெள்ளி............................. 77.10
1 கிலோ வெள்ளி............................77,100
திங்கள்கிழமை விலை நிலவரம்
1 கிராம் தங்கம்.......................... 5,075
1 சவரன் தங்கம்...............................40,600
1 கிராம் வெள்ளி.............................74.70
1 கிலோ வெள்ளி.............................74,700