சென்னையில் ஒரே நாளில் ரூ.33 கோடிக்கு மது விற்பனை
சென்னையில் நேற்று செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் ரூ.33 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சென்னையில் நேற்று செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் ரூ.33 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சுமாா் 700-க்கும் அதிகமான டாஸ்மாக் கடைகள் உள்ளன. பொது முடக்கம் காரணமாக மாா்ச் 24-ஆம் தேதியில் இருந்து மூடப்பட்டிருந்த இந்தக் கடைகளை நேற்று செவ்வாய்க்கிழமை (ஆக 18) முதல் திறக்க உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து அரசு வழிகாட்டுதல்களின்படி, கடைகள் திறக்கப்பட்டது. நேற்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு இரவு 7 மணி வரை விற்பனை நடைபெற்றது.
இதில்,நேற்று ஒரே நாளில் ரூ. 33 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.