முகப்பு
தமிழ்நாடு

பூண்டி ஏரியில் மீன்பிடிக்கச் சென்ற இருவர் நீரில் மூழ்கி பலி

திருவள்ளூர் அருகே பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் மீன் பிடிக்கச் சென்ற நீரில் மூழ்கி இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:09 PM
நீரில் மூழ்கி உயிரிழந்த இமானுவேல், சஞ்சய்குமார்
பகிர்:

திருவள்ளூர் அருகே பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் மீன் பிடிக்கச் சென்ற நீரில் மூழ்கி இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் அருகே பூண்டி கிராமத்தைச் சேர்ந்த காளிதாஸ் என்பவரின் மகன் இமானுவேல்(16), ரமேஷ் என்பவரின் மகன் சஞ்சய்குமார்(19). இவர்கள் இருவரும் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் தூண்டில் போட்டு மீன் பிடிப்பதற்காக புதன்கிழமை மாலையில் சென்றனர். அப்போது, கரையோரத்தில் இருந்த போது திடீரென இமானுவேல் ஏரியில் விழுந்த நிலையில் நீச்சல் தெரியாததால் மூழ்கியதாகவும், அவரைக் காப்பாற்ற சஞ்சய்குமாரும் குதித்துள்ளார்.

அதையடுத்து சிறிது நேரத்தில் இருவரும் ஆழமான பகுதிக்குச் சென்று நீரில் மூழ்கியுள்ளனர். இதை கரையில் இருந்த பார்த்தவர்கள் உடனே புல்லரம்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து புல்லரம்பாக்கம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சிவா தலைமையில் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து சுமார் 2 மணி நேரம் போராடி தீயணைப்புத் துறையினர் மற்றும் மீனவர்கள் ஆகியோர் இருவரின் சடலங்களையும் மீட்டனர். பின்னர் இருவரின் சடலங்களையும் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து புல்லரம்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த மீன்பிடிக்கச் சென்ற இளைஞர்கள் இருவர் சிறிது நேரத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.