அடுத்த 24 மணிநேரத்தில் கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய உள்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
அடுத்த 24 மணிநேரத்தில் கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய உள்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 24 மணிநேரத்தில் கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய உள்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனத்தின் காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய உள்மாவட்டங்களான வேலூர், ராணிப்பேட்டை, சேலம், தர்மபுரி, திருச்சி, கரூர், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்க, விருதுநகர், திருவண்ணாமலை, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதனை தொடர்ந்து, வரும் 23, 24, 25 தேதிகளில் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள்மாட்டங்களில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை மற்றும் டெல்டா மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஒட்டி பதிவாகும்.
கடந்த 24 மணிநேரத்தில் மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் 5 செ.மீ., திண்டுக்கல் நத்தம், ஆண்டிப்டி 4 செ.மீ., சாதையாறு 3 செ.மீ., மழைப்பதிவாகியுள்ளது.
தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 50-60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.