சென்னையில் கரோனா பாதிப்பு 
தமிழ்நாடு

சென்னையில் 12,962 பேர் சிகிச்சையில் உள்ளனர்: மண்டலவாரியாக விவரம்

சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 12,962 ஆக உள்ளது. 

DIN

சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 12,962 ஆக உள்ளது. 

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் சென்னையில் பாதிப்பு சற்றே குறைந்து வருகிறது. 

சென்னையில் இதுவரை 1,24,071 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,564 பேர் உயிரிழந்துள்ளனர். 1,08,545 பேர் குணமடைந்த நிலையில், தற்போது 12,962 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தொடர்ந்து, சென்னையில் மொத்தம் உள்ள 15 மண்டலங்களில் கரோனா சிகிச்சை பெற்று வருவோர், குணமடைந்தவர்கள் மற்றும் இறந்தவர்கள் விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. 

அதன்படி, கோடம்பாக்கத்தில் 1,544 பேரும், அண்ணா நகரில் 1,480 பேரும், அம்பத்தூரில் 1,311 பேரும், அடையாறில் 1,399 பேரும், வளசரவாக்கத்தில் 1,190  பேரும், கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

SCROLL FOR NEXT