காலமானார்: என்.எஸ். முத்துக்கிருஷ்ணராஜா
ராஜபாளையம் கம்பன் கழகப் பொதுச் செயலாளர் என்.எஸ். முத்துக்கிருஷ்ணராஜா(85) முதுமை காரணமாக ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அவரது இல்லத்தில் காலமானார்.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் கம்பன் கழகப் பொதுச் செயலாளர் என்.எஸ். முத்துக்கிருஷ்ணராஜா(85) முதுமை காரணமாக ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அவரது இல்லத்தில் காலமானார்.
இவர் ராஜபாளையத்தில் 1980-ம் ஆண்டு முதல் கம்பன் கழகத்தைத் தொடங்கி தற்போது வரை பொதுச் செயலாளராக இருந்துள்ளார். இவர் கம்பன் கழகம் சார்பில் பல நூல்களைத் தொகுத்து வெளியிட்டிருக்கிறார்.
ஆண்டுதோறும் ராஜபாளையத்தில் கம்பன் கழக ஆண்டு விழாவில் சிறப்பு அழைப்பாளர்களை அழைத்து கம்பனின் சிறப்பு மற்றும் சொற்பொழிவுகள் நிகழ்ச்சி நடத்துவார். இவருக்கு ராஜம்மாள்(80) என்ற மனைவியும் ஒரு மகன், மகள் உள்ளனர்.
அன்னாரது இறுதிச் சடங்கு ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.
தொடர்புக்கு: 9842079999.