முகப்பு
தமிழ்நாடு

கன்னியாகுமரி மாவட்டத்துக்கு ஆக. 31 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை

ஓணம் பண்டிகையை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வருகிற ஆகஸ்ட் 31 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:11 PM
கோப்புப்படம்
பகிர்:

ஓணம் பண்டிகையை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வருகிற ஆகஸ்ட் 31 ஆம் தேதி (திங்கள்கிழமை) உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

கேரளத்தில் ஓணம் பண்டிகை ஆகஸ்ட் 22 ஆம் தேதி தொடங்கியுள்ள நிலையில் செப்டம்பர் 2 வரை 10 நாள்களுக்கு கொண்டாடப்படுகிறது. கேரளத்தை ஒட்டியுள்ள கன்னியாகுமரி மாவட்டத்திலும் ஓணம் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.

இதையடுத்து, பண்டிகையின் முக்கிய நாளான ஆகஸ்ட் 31 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே அறிவித்துள்ளார். 

அதற்கு ஈடாக செயல்படும் வேலை நாள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.