சென்னையில் இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க
சென்னையில் இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் நடைபெற உள்ள மாணவர் சேர்க்கை குறித்து மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சென்னை: சென்னையில் இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் நடைபெற உள்ள மாணவர் சேர்க்கை குறித்து மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் 2020-2021 ஆம் கல்வியாண்டிற்குரிய மாணவர் சேர்க்கையில் குழந்தைகளுக்கான கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 மற்றும் தமிழ்நாடு குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை விதிகள் 2011-ன்படி வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினர் குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் 25% ஒதுக்கீட்டின்படி மாணவர்கள் சேர்க்கை 27.08.2020 முதல் 25.09.2020 வரை நடைபெறவுள்ளது.
25% ஒதுக்கீட்டின்படி சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் பெற்றோர்கள் அவர்தம் குழந்தைகளின் விண்ணப்பங்களை rte.tnschools.gov.in என்ற இணையத்தில் பதிவேற்றம் செய்திடலாம் அல்லது விண்ணப்பிக்கும் பள்ளியின் வாயிலாக பதிவேற்றம் செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பள்ளியில் பெறப்பட்ட விண்ணப்பங்களை பள்ளியில் பதிவேற்றம் செய்வது சார்பாக எதிர்பாராத இடர்பாடுகள் ஏற்படின் சென்னை மாவட்ட கல்வித் துறை சார்பாக அமைக்கப்பட்டுள்ள 27 மையங்களை தொடர்பு கொண்டு பதிவேற்றம் செய்திடலாம் என்ற விவரம் பெற்றோர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
சென்னை மாவட்ட கல்வித் துறை சார்பாக பொது மக்கள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்திட அமைக்கப்பட்டுள்ள மையங்கள் விவரம்
1. முதன்மைக் கல்வி அலுவலகம், மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகம், சென்னை-8.
2. மாவட்ட திட்ட அலுவலகம், மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகம், சென்னை மாவட்டம், சென்னை-8.
3. மாவட்டக் கல்வி அலுவலகம், சென்னை கிழக்கு, சென்னை-
4. மாவட்டக் கல்வி அலுவலகம், மேற்கு சென்னை, டிபிஐ வளாகம், சென்னை-6.
5. மாவட்டக் கல்வி அலுவலகம், வடசென்னை, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகம், சிட்கோ நகர், சென்னை-49.
6. மாவட்டக் கல்வி அலுவலகம், தென்சென்னை, டாக்டர் அம்பேத்கார் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகம், காயதி இர்வின் ரோடு, எழும்பூர், சென்னை-8.
7. மாவட்டக் கல்வி அலுவலகம், மத்தியசென்னை, அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி வளாகம்,சைதாப்பேட்டை, சென்னை-15.
8. வட்டாரக் கல்வி அலுவலகம், புரசைவாக்கம்.
எண், 88 தானா தெரு, புரசைவாக்கம் சென்னை-7.
9. வட்டாரக் கல்வி அலுவலகம், இராயபுரம்.
எண்.71, ஆர்தூண் சாலை, ராயபுரம் சென்னை-13.
10. வட்டாரக் கல்வி அலுவலகம், திருவல்லிக்கேணி.
எண்.1, பெசண்ட் ரோடு, ஐஸ் ஹவுஸ், திருவல்லிக்கேனி. சென்னை-5.
11. வட்டாரக் கல்வி அலுவலகம், பெரம்பூர்,
எண். 2/51, ஏழாவது தெரு, சிட்கோ நகர்,வில்லிவாக்கம், சென்னை-49.
12. வட்டாரக் கல்வி அலுவலகம்,பெரியமேடு.
எண்.11, டேவிட்சன் தேரு, பிராட்வே, சென்னை-1.
13. வட்டாரக் கல்வி அலுவலகம், ஜார்ஜ் டவுண்,
எண்.11, டேவிட்சன் தெரு, பிராட்வே, சென்னை-1.
14. வட்டாரக் கல்வி அலுவலகம், எழும்பூர்.
டி.பி.ஐ வளாகம், சென்னை-6.
15. வட்டாரக் கல்வி அலுவலகம், மயிலாப்பூர்.
எண்.1, பெசண்ட் ரோடு, ஐஸ் ஹவுஸ், திருவல்லிக்கேணி. சென்னை-5.
16. வட்டாரக் கல்வி அலுவலகம், அடையாறு,
எண்.20, பஜார் தெரு, சைதாப்பேட்டை,சென்னை-15.
17. வட்டாரக் கல்வி அலுவலகம், தி.நகர்.
டி.பி.ஐ வளாகம், சென்னை-6.
மற்றும் 10 வட்டார வள மையங்கள்.
இத்தகவலை சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்.சீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.