கூட்டணி தலைமைப் பற்றி தேர்தல் நேரத்தில் முடிவு: முதல்வர்
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் யார் தலைமையில் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது என்பது தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கூறியுள்ளார்.
தமிழ்நாடுகூட்டணி தலைமைப் பற்றி தேர்தல் நேரத்தில் முடிவு: முதல்வர்
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் யார் தலைமையில் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது என்பது தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி தலைமை பற்றி தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கூறியுள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகள் குறித்து முதல்வர் பழனிசாமி இன்று நேரில் ஆய்வு செய்தார்.
பிறகு செய்தியாளர்களை சந்தித்தார் முதல்வர். அப்போது செய்தியாளர்கள் கேட்ட பல கேள்விகளுக்குஅ வர் பதிலளித்தார்.
நீட் தேர்வு குறித்த கேள்விக்கு, தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி கடந்த ஜூன் மாதமே மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளேன் என்று பதிலளித்தார்.
கூட்டணிக்கு யார் தலைமை என்பதை பாஜக தான் முடிவு செய்யும் என்ற அக்கட்சியின் நிலைப்பாடு குறித்த கேள்விக்கு, தேர்தல் வரும் போதுதான் கூட்டணி பற்றியும் யார் தலைமையில் கூட்டணி அமைக்கப்படும் என்பது பற்றியும் முடிவு செய்யப்படும் என்று பழனிசாமி பதிலளித்துள்ளார்.