முகப்பு
தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் ஒரே நாளில் ரூ. 243 கோடிக்கு மது விற்பனை

தமிழகம் முழுவதும் நேற்று ஒரேநாளில் டாஸ்மாக் கடைகளில் ரூ. 243 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:13 PM
கோப்புப்படம்
பகிர்:

தமிழகம் முழுவதும் நேற்று ஒரேநாளில் டாஸ்மாக் கடைகளில் ரூ. 243 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.

இதில், அதிகபட்சமாக சென்னை மண்டலத்தில் ரூ. 52.50 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ளது. அதைத் தொடர்ந்து திருச்சி மண்டலத்தில் ரூ. 48.26 கோடிக்கும், மதுரை மண்டலத்தில் ரூ. 49.75 கோடிக்கும், சேலம் மண்டலத்தில் ரூ. 47.38 கோடிக்கும், கோவை மண்டலத்தில் ரூ. 45.23 கோடிக்கும் மது விற்பனையாகியுள்ளது.

கடந்த வாரம் சனிக்கிழமை ரூ. 250 கோடிக்கு மது விற்பனையாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 18 ஆம் தேதி முதல் சென்னையிலும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதால் பொதுமுடக்க காலத்தில் முதல்முறையாக கடந்த வாரம் மது விற்பனை ரூ.250 கோடியைத் தாண்டியது. 

முழு கட்டுரையைப் படிக்க →