முகப்பு
பொன்முடி
தமிழ்நாடு

பொது முடக்க விதிமீறல்: திமுக மாவட்டச் செயலர் பொன்முடி, முன்னாள் எம்.பி. லட்சுமணன் மீது வழக்குப்பதிவு

விழுப்புரத்தில் பொது முடக்க விதிமீறல் காரணமாக திமுக மாவட்டச் செயலர் பொன்முடி, முன்னாள் எம்.பி. லட்சுமணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:13 PM
பொன்முடி
பகிர்:

விழுப்புரத்தில் அண்மையில் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த முன்னாள் எம்.பி. இரா. லட்சுமணன், மேலும் தனது ஆதரவாளர்களை கட்சியில் சேர்த்தார். இதற்கான நிகழ்ச்சி  விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

திமுக மத்திய மாவட்டச் செயலாளர் பொன்முடி, லட்சுமணன் உள்ளிட்டோர் முன்னிலையில்  500-க்கும் மேற்பட்டோர் திரண்டிருந்தனர். இந்த நிலையில் விழுப்புரத்தில் பொதுமுடக்க விதிகளை மீறியதாக திமுக முன்னாள் அமைச்சர் க. பொன்முடி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. லட்சுமணன் உள்ளிட்ட 317 பேர் மீது, 5 பிரிவுகளின் கீழ் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கரோனா பொது முடக்க ஊரடங்கு  தடை உத்தரவை மீறியதாகவும், நோய் தொற்று பரவும் என்று தெரிந்தே அதிகளவில் கட்சியினரை திரட்டி கூட்டம் நடத்தியதாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →