தமிழ்நாடு

சிவகங்கை: மணல் கடத்த முயன்ற லாரிகள் பறிமுதல்

DIN

மானாமதுரை அருகே மணல் கடத்த முயன்ற பொக்லைன் இயந்திரம் மற்றும் லாரிகள் காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்டன.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கள்ளர்வலசை கிராமத்தில் வைகையாற்றை ஒட்டி கருவேல மரங்கள் அடர்த்தியாக வளர்ந்துள்ள பகுதியில் தனியார் பட்டா நிலத்தில் சவுடு மண் அள்ள அனுமதி பெறப்பட்டு லாரிகளில் ஆற்று மணல் கடத்தப்படுவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து மானாமதுரை காவல் ஆய்வாளர் சேது மற்றும் காவல்துறையினர் கள்ளர்வலசை கிராமத்துக்கு சென்றனர்.

அப்போது அங்கு சவடு மண்ணுக்கு கீழே உள்ள ஆற்று மணலை சட்டவிரோதமாக அள்ளிச் செல்வதற்காக 16 லாரிகள் வரிசையாக நின்றன. காவல்துறையினரை கண்டதும் லாரிகள், பொக்லைன் இயந்திரத்தின்  ஓட்டுநர்கள்  அவற்றின் சாவிகளை எடுத்துக்கொண்டு தப்பியோடிவிட்டனர்.

இவர்களில் 3 ஓட்டுநர்கள் மட்டும் காவல்துறையிடம் சிக்கினர். அதைத்தொடர்ந்து காவல்துறையினர் அந்த இடத்திலேயே 16 லாரிகள் ஒரு பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்தனர்.

பின்னர் அவற்றில் சாவியிருந்த 6 லாரிகளை மட்டும் அங்கிருந்து கிளப்பி சிப்காட் காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். 10 லாரிகளுக்கும் பொக்லைன் இயந்திரத்துக்கும்  சாவிகள் இல்லாததால் அவை கள்ளர்வலசை கிராமத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்த லாரிகளை யாரும் ஓட்டிச்செல்லாமல் இருக்க அங்கு காவலர்கள் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். மாற்று சாவிகள் ஏற்பாடு செய்து லாரிகளை காவல் நிலையத்துக்கு  எடுத்துவர உள்ளூர் காவலர்கள் மேலதிகாரிகளின் உத்தரவுக்காக காத்திருக்கின்றனர்.

மணல் கடத்தச் சென்று லாரிகள் பிடிப்பட்டது தொடர்பாகவும் பிடிபட்ட 3 ஓட்டுநர்கள் மீதும் மானாமதுரை சிப்காட் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT