முகப்பு
தமிழ்நாடு

தேனி அருகே இருசக்கர வாகனங்கள் மோதி விபத்து: இளைஞர் பலி

தேனி அருகே கோடாங்கிபட்டி பகுதியில் திங்கள்கிழமை இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் இளைஞர் உயிரிழந்தார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:13 PM
தேனி அருகே கோடாங்கிபட்டி பகுதியில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் இளைஞர் உயிரிழப்பு
பகிர்:

தேனி அருகே கோடாங்கிபட்டி பகுதியில் திங்கள்கிழமை இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் இளைஞர் உயிரிழந்தார். 2 பேர் படுகாயமடைந்தனர்.

தேனி மாவட்டம் போடி, சாமியார் சந்து பகுதியைச் சேர்ந்தவர் பாக்கியராஜ் மகன் தாமோதரனும் (35),  பாரதியார் நகரைச் சேர்ந்தவர் அழகர்சாமி மகன் சரவணனும்(34),  இருசக்கர வாகனத்தில் தேனியிலிருந்து போடி நோக்கி சென்றுள்ளனர். போடி, புதூர் நடுத்தெருவைச் சேர்ந்தவர் ஐயப்பன் மகன் ராஜேஷ்(24) என்பவர், போடியிலிருந்து தேனிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

அப்போது, கோடாங்கிபட்டி பகுதியில் இரண்டு இருசக்கர வாகனங்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில, தாமோதரன் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சரவணன், ராஜேஷ் ஆகியோர் பலத்த காயமடைந்து தேனி அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து பழனிசெட்டிபட்டி காவல் நிலைய காவலர்கள் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.