கோப்புப்படம் 
தமிழ்நாடு

சாதிவாரி கணக்கெடுப்பு ஆணையம்: முதல்வர் அறிவிப்பு

​தமிழகம் முழுவதும் சாதிய அடிப்படையிலான புள்ளி விவரங்களை சேகரிக்க பிரத்யேக ஆணையம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

DIN


தமிழகம் முழுவதும் சாதிய அடிப்படையிலான புள்ளி விவரங்களைச் சேகரிக்க பிரத்யேக ஆணையம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"ஜெயலலிதா, தமிழ்நாட்டில் 69 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு அரசியலமைப்புச் சட்ட பாதுகாப்பினை பெற்று தந்து, தமிழ்நாட்டின் சமூகநீதி வரலாற்றில் நீங்கா இடம் பிடித்து, “சமூக நீதி காத்த வீராங்கனை” என்று அனைவராலும் போற்றப்படுகின்றார். தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகளும், சமுதாய அமைப்புகளும் சாதி வாரியான கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பல்வேறு காலக்கட்டங்களில் கோரிக்கைகளை வைத்து வருகின்றனர்.  

அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் பயன் அனைத்து பிரிவினருக்கும் சென்றடைவதை அரசு உறுதிபடுத்த வேண்டியுள்ளது. மேலும், 69 சதவீத இட ஒதுக்கீடு சம்பந்தமான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், இவ்வழக்கையும் எதிர்கொள்ள இத்தகைய புள்ளி விவரங்கள் தேவைப்படுகின்றன.

இக்கோரிக்கைகளை நிறைவேற்ற தற்போதைய காலகட்டத்தில் உள்ள சாதிவாரியான அளவிடக் கூடிய முழுமையான புள்ளிவிவரங்கள் அவசியம் தேவைப்படுகின்றன. எனவே, தமிழ்நாடு முழுவதும் சாதி அடிப்படையிலான புள்ளிவிவரங்களைச் சேகரித்தால் மட்டுமே முழு தகவல் கிடைக்கப் பெறும்.
 
சாதி வாரியான தற்போதைய நிலவரப்படியான புள்ளிவிவரங்களை சேகரிக்கும் வழிமுறைகளை ஆராய்ந்து, அதன் அடிப்படையில் உரிய தரவுகளை சேகரித்து, அறிக்கை சமர்ப்பிக்க அதற்கென பிரத்யேக ஆணையம் ஒன்று அமைக்கப்படும்.

ஜெயலலிதா சமூக நீதி காப்பதில் எந்த அளவிற்கு உறுதியாக இருந்தார் என்பதை நாடறியும்.  எனவே, ஜெயலலிதா வழியில் செயல்படும், இவ்வரசும் அதே உறுதியில் செயல்பட்டு சமூக நீதியை நிலைநாட்ட அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

SCROLL FOR NEXT