தமிழ்நாடு

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக கொட்டும் மழையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

DIN


திண்டுக்கல்: தில்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக திண்டுக்கல்லில் கொட்டும் மழையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி தில்லியில் விவசாயிகள் கடந்த 7 நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவாக திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கடந்த மூன்று நாள்களாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், 4வது நாளாக திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன்பு காய்கனி மாலை அணிந்து கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கட்சியின் மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம் மாநில குழு உறுப்பினர் என்.பாண்டி ஆகியோர் தலைமை வகித்தனர். 

ஆர்ப்பாட்டத்தின்போது விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாகவும் வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்ப பெற மறுத்து வரும் மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷமிட்டனர். தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 60க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் உயிரிழப்பு

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

SCROLL FOR NEXT